இலங்கையில் வெள்ளரிப்பழத்திற்கும், பழச்சாற்றிற்கும், இளநீருக்கும் கிராக்கி)

இலங்கையில் தற்போது நிலவிவரும் அதிக வெப்ப மற்றும் உஷ்ன நிலைமை காரணமாக பொது மக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் பல்வேறு அசௌகரியங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.
அம்பாநை மாவட்டத்திலுள்ள மக்கள் வெப்பத்தை
தணிக்கும் இளநீர், பழச்சாறு மற்றும் வெள்ளரிப்பழம் என்பவற்றை அதிகமாக பருகி வருவதால் அதற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.
மக்கள் குளிர்மை மிகுந்த அல்லது நிழல்கரைகளை நாடி சிறுபயணங்களை மேற்கொள்வதையும் காணக்ககூடியதாயுள்ளது. மாலைப்பொழுதில் கடற்கரைகளை நாடுகின்றனர்.
அத்தோடு அம்பாறை மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர் ஒன்று தற்போது 70 ரூபாய் முதல் 80 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்படுகிறது
வெப்பத்தை தணிக்கும் வெள்ளரிப்பழம் 50 ரூபா தொடக்கம் 200ரூபாய் வரையில் தினமும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக காரைதீவுப்பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட வெள்ளரிப்பழ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.