பூமகள் கற்கை மைய முன்பள்ளி 2௦15ம் ஆண்டு விளையாட்டு விழா.(புகைப்படங்கள்)

மகள் நற்பணி மன்றத்தால் நடாத்தப்படும் பூமகள் கற்கை மைய முன்பள்ளி மழலைகளின் 2௦15ம் ஆண்டு விளையாட்டு விழாவானது ௦2-௦8-2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.40 மணியளவில் பூமகள் கற்கை மைய முன்பள்ளி தலைவர் திரு.இ.றஞ்சித் அவர்களின் தலைமையில்
சிறுப்பிட்டி சூரியோதயம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க கிளை அருகாமையில் வெகு விமரிசையாக ஆரம்பமானது.
இவ் விளையாட்டு விழாவிலே பிரதம விருந்தினராக யாழ்/இந்து ஆரம்பப் பாடசாலை அதிபர் திரு.நா.மகேந்திரராஜா அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலையின் ஆசிரியர் திரு.ஆ.பொன்வாசன் அவர்களும், J/272 ,சிறுப்பிட்டி மேற்கு கிராம அலுவலர் திரு.தி.வரதராஜன் அவர்களும், தென்னைப் பயிர்ச்செய்கை சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி.ந.நந்தினி அவர்களும், கௌரவ விருந்தினர்களாக களஞ்சியப் பொறுப்பாளர் திரு.க.மகாராசா அவர்களும், சிறுப்பிட்டி பூமகள் சனசமூக நிலையத்தலைவர் செல்வன்.ந.காண்டீபன் அவர்களும், சிறுப்பிட்டி பூமகள் விளையாட்டுக்கழகத்தலைவர் செல்வன்.சோ.தயாளன் அவர்களும், கலந்து சிறப்பித்தனர்.
இவ் விழாவிலே முதலாவது நிகழ்வாக பூமகள் கற்கை மைய முன்பள்ளி மழலைகள் விருந்தினர்களிற்கு மலர்மாலை அணிவித்து அணிநடையுடன் வரவேற்றனர். அதனைத் தொடர்ந்து மங்களத்தின் சின்னமாக மங்கள விளக்கேற்றும் வைபவம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து பூமகள் கற்கை மைய முன்பள்ளி மழலைகளான ற.சகானா, த.பிரவீன், ஜெ.லானுஜன் ஆகியோர் இறை வணக்கம் இசைத்தனர். பின் பிரதம விருந்தினர் பூமகள் நற்பணி மன்றக்கொடியினை ஏற்றி வைத்தார். தொடர்ந்து பூமகள் கற்கை மைய முன்பள்ளி ஆசிரியைகளான செல்வி.க.ஜஷிந்தா, செல்வி.உ.கீர்த்திகா, ஆகியோரால் இல்லக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து பூமகள் பூமகள் கற்கை மைய முன்பள்ளி க் கீதத்தினை சி. ஹபிஷன், ஜெ. கபிஷாந், ப. சஸ்மிகா, ஜெ. லானுஜன், ம. டனுஷாந் ஆகிய பூமகள் கற்கை மைய முன்பள்ளி மழலைகள் மிகவும் இனிமையாக இசைத்தனர்.
பின்னர் பூமகள் கற்கை மைய பூமகள் ஆசிரியர் செல்வி.உ.கீர்த்திகா அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து பிரதம விருந்தினர் அவர்கள் விளையாட்டு விழாவை ஆரம்பித்து வைக்கும் முகமாக ஒலிம்பிக்சுடரை ஏற்றி வைத்தார். மாணவர்கள் அதனை நிறைவேற்றினர். தொடர்ந்து பூமகள் கற்கை மைய முன்பள்ளி மாணவனான த.பிரவீன் விளையாட்டு ஒழுங்கு விதிகளை மதித்து சத்தியப்பிரமாணம் நிகழ்த்தினார். இதனை தொடர்ந்து பிரதம விருந்தினர் விழாவை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.
விளையாட்டு விழாவில் முதற் குழு விளையாட்டாக நிறைகுடம் அமைத்தல் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பழம் வைத்தலும் எடுத்தலும், கொடி நாட்டல்,வளையம் பரிமாறுதல், ஒத்த பழத்தை தெரிவு செய்தல், பழம் பொறுக்குதல், பூட்டூசியைக் கோவையாக்குதல், பஞ்சினால் நீர் நிரப்புதல், வட்டத்தில் நீர் நிரப்புதல், தாரா நடை, நீர் நிரப்புதல், தடை தாண்டல், குளிர்பானம் அருந்துதல், நிறக்கட்டி அடுக்குதல், பந்து நகர்த்துதல் போன்ற விளையாட்டுக்கள் இடம்பெற்றன.
அதனைத் தொடர்ந்து இடைவேளை நிகழ்வாக பார்வையாளர்களின் கண்களிற்கு விருந்தளிக்கும் இசையும் அசைவும் நிகழ்வு இடம்பெற்றது. இவ் இடைவேளை நிகழ்வின் போது விருந்தினர்களிற்கும், பெற்றோர்களிற்கும், பூமகள் கற்கை மைய முன்பள்ளி மழலைகளிற்கும், பார்வையாளர்கள் அனைவருக்கும் சிற்றுண்டிகளும், குளிர்பானமும் பரிமாறப்பட்டது. அதனைத் தொடர்ந்து பூமகள் பூமகள் கற்கை மைய முன்பள்ளி யின் தலைவர் திரு.இ.றஞ்சித் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து ஏனைய விளையாட்டுக்களான மணல் நிரப்புதல், மீன் பிடித்தல், முயற்பாய்ச்சல், சங்கிலி உருவாக்குதல், சிரட்டையில் நடத்தல், பாடசாலை ஆயத்தம், சாக்கோட்டம், கயிறு இழுத்தல், பலூன் உடைத்தல், பரிசுப் பொதி கடத்துதல், போன்ற விளையாட்டுக்கள் நடைபெற்று பூமகள் கற்கை மைய முன்பள்ளி மழலைகளின் விளையாட்டுக்கள் இனிதே நிறைவு பெற்றது.
அதனைத் தொடர்ந்து பூமகள் பூமகள் கற்கை மைய முன்பள்ளி பழைய மாணவர்களின் சங்கீதக் கதிரை விளையாட்டு இடம்பெற்றது. தொடர்ந்து பெற்றோர் நிகழ்ச்சி, உத்தியோகத்தர் நிகழ்ச்சி நடைபெற்றது. விளையாட்டு விழாவை சிறப்பிக்கும் வகையில் பூமகள் கற்கை மைய முன்பள்ளி மழலைகளின் விநோத உடை நிகழ்வு நடைபெற்றது. இதில் பொலித்தீன் இரண்டு மாணவர்கள், திருஞானசம்பந்தர், பலூன் வியாபாரி, காய்கறி வியாபாரி, ஆசிரியர், மாணவன், மாணவி, அன்னாசிப்பழம், வண்ணத்துப்பூச்சி, நட்டுவர், போன்ற பாத்திரங்களில் போலச்செய்தனர்.
தொடர்ந்து பிரதம விருந்தினர் உரை இடம்பெற்றது. அவர் உரையாற்றுகையில், இன்று பூமகள் கற்கை மைய முன்பள்ளியின் விளையாட்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டதில் மகிழ்ச்சி என்றும், பிள்ளைகளினுடைய விளையாட்டுக்கள் தரமாக இருந்தது என்றும், இது போன்ற விளையாட்டு நிகழ்வுகளை கிராமத்தில் பார்த்தது இதுவே முதற்தடவை என்றும், எனது உற்ற நண்பன் றஞ்சித் அவர்கள் சிறந்த ஒரு செயற்பாட்டாளர் என்றும், அவரிற்கு ஒரு பூமகள் கற்கை மைய முன்பள்ளி விழாவை தலைமை தாங்கி நடாத்துவதற்கு வாய்ப்பு கிடைத்ததை எண்ணி நான் பெருமைப்படுகிறேன் என்றும், இச் சிறார்களை வழிப்படுத்திய பூமகள் கற்கை மைய முன்பள்ளி ஆசிரியர்களுக்கும், அவர்களை ஊக்குவித்த பெற்றோர்களிற்கும் வாழ்த்துக்கள் என்றும் கூறினார்.
இவரது உரையை அடுத்து சிறப்பு விருந்தினர் உரையினை நீர்வேலி றோமன் கத்தோலிக்க ஆசிரியர் திரு.ஆ.பொன்வாசன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் உரையாற்றுகையில் இவ் விழாவானது மிகவும் சிறப்பாக நடைபெற்றது என்றும், இவ்வாறு மிகவும் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் பூமகள் கற்கை மைய முன்பள்ளி க்கு நிரந்தர பாடசாலை கட்டடம் ஒன்று தேவை என்றும், அதற்கு இவ் ஊர் மக்கள் மனமுவந்து செயற்பட வேண்டும் என்றும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து கௌரவ விருந்தினர் உரை இடம்பெற்றது. இவ் உரையினை சிறுப்பிட்டி பூமகள் சனசமூகத்தலைவர் செல்வன்.ந.காண்டீபன் அவர்கள் நிகழ்த்தினார். அவர் உரையாற்றுகையில் இவ் விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது என்று கூறினார்.
தொடர்ந்து பரிசில்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வெற்றிக்கிண்ணத்தையும் சான்றிதழ்களையும் அமரர்களான செல்லத்துரை நல்லம்மா அவர்களின் நினைவாக யாழருவி நிறுவனத்தினால் வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து நன்றியுரை இடம்பெற்றது. இதனை திருமதி.அஜந்தா ஞானசேகரன் அவர்கள் மிகவும் சிறப்பாக நிகழ்த்தினார். தொடர்ந்து கொடியிறக்கம் இடம்பெற்றது. இவ் விளையாட்டு விழா மிகவும் சிறப்பாக நடக்க எமது பூமகள் கற்கை மைய முன்பள்ளி நிர்வாகத்தினர், பெற்றோர்கள், யாழருவி நிறுவனத்தினர், சூரியோதயம் பல நோக்கு கூட்டுறவுச்சங்க பொது முகாமையாளர், பூமகள் சனசமூக நிலைய நிர்வாகத்தினர், பூமகள் விளையாட்டுக் கழக நிர்வாகத்தினர், சிற்றுண்டி தயாரித்த திரு.கணேசலிங்கம் குடும்பத்தினரும், திரு.ஜெகதீஸ்வரன் குடும்பத்தினரும்,திரு.செ.சிவபாலன் குடும்பத்தினர் ஆகியோர் எமக்கு தோளோடு தோள் நின்று உதவி புரிந்தவர்களாவர்.
இவ் விழா முடிவில் மக்களின் மன உணர்விலிருந்து வெளிப்பட்ட விடயங்களாக, மைதான அலங்கரிப்பு சிறப்பாக இருந்தது, ஒரு விழாவில் நடைபெற வேண்டிய அம்சங்கள் வெளிப்பட்டது, மழலைகள் ஒழுங்காக விளையாடுவதற்கு எந்தவித தடங்கலும் இன்றி நேர்த்தியாக நடைபெற்றது, பார்வையாளர்களை மிகவும் சிறப்பாக கவனித்தனர், இசையும் அசைவும் நிகழ்ச்சி மிகவும் சிறப்பாக அமைந்தது, பரிசுப்பொதி கடத்தல் நிகழ்ச்சி மிகவும் வித்தியாசமாக இருந்தது, மீன் பிடித்தல், பலூன் உடைத்தல் நிகழ்வுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தன. போன்றவை மக்களின் கருத்துக்களாகும். இவ்வாறு பூமகள் கற்கை மைய முன்பள்ளி மழலைகளின் விளையாட்டு விழாவானது மாலை 6 மணியளவில் இனிதே நிறைவு பெற்றது..
நன்றி.