பேச்சு நிகழ்வில் பங்குபற்றிய சிறார்களூக்கு பரிசில்கள்

யாழ்ப்பாணம் – குப்பிளான் கேணியடி ஞான வைரவர் ஆலயத்தில் கடந்த பத்து நாட்களாக அலங்கார உற்சவத்தை முன்னிட்டுச் சிறார்களின் பேச்சுத் திறனை ஊக்குவிக்கும் வகையில் ஆலய பரிபாலன சபையால் தினம் தோறும் பாடசாலைச் சிறார்கள் பேச்சு நிகழ்வில் பங்குபற்றச் சந்தர்ப்பம்
வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறு பேச்சு நிகழ்வில் கலந்து கொண்ட சிறார்களுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (22-0-3-2016) இரவு – 8 மணி முதல் ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
குப்பிளான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத் தலைவர் க. சின்னராசா தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வலி. தெற்குப் பிரதேச செயலகத்தின் சிறுவர் மேம்பாட்டு உரிமை அலுவலர் திருச் செல்வம் கிருஸ்ணகுமார் பிரதம விருந்தினராகவும், வலி. தெற்குப் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர் பொன் சந்திரவேல் சிறப்பு விருந்தினராகவும், ஊடகவியலாளர் செ -ரவிசாந் கெளரவ விருந்தினராகவும் கலந்து கொண்டு சிறார்களுக்கான பரிசில்களை வழங்கி வைத்தனர். இதன் போது ஆலய உற்சவ காலங்களில் தொண்டாற்றிய இளைஞர்களுக்கான ஊக்குவிப்புப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.
இந் நிகழ்வில் ஆலயப் பிரதம குரு சிவஸ்ரீ சி. கிருஸ்ணசாமிக் குருக்கள் ஆசியுரையை நிகழ்த்தியதுடன், பிரதம விருந்தினரான வலி. தெற்குப் பிரதேச செயலகத்தின் சிறுவர் மேம்பாட்டு உரிமை அலுவலர் திருச் செல்வம் கிருஸ்ணகுமாரும் கலந்து கொண்டு உரையாற்றினார்.
நிகழ்வில் ஆலய பரிபாலன சபையின் செயலாளர் இ. மகேஸ்வரராஜ் உட்பட உபயகாரர்கள் , வைரவப் பெருமான் அடியார்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதேவேளை இவ்வாலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த 14 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகித் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதுடன் நாளை வியாழக்கிழமை (24-03-2016) காலை -10 மணிக்கு 108 சங்காபிஷேக உற்சவமும் அதனைத் தொடர்ந்து வைரவப் பெருமான் வீதியுலா வருதலும் மகேஸ்வர பூஜை (அன்னதானம்) இடம்பெறும் எனவும் ஆலய பரிபாலன சபை தெரிவித்துள்ளது.