நுாறு வருடங்களின் பின் புனரமைக்கப்படவுள்ள ரயில் பாதைகள்

கொழும்பு - யாழ்ப்பாணம் வரையான புகையிரதப் பாதையில் மஹவையிலிருந்து தாண்டிக்குளம் வரையான புகையிரதப் பாதை சுமார் 110 வருடங்களுக்குப் பின்னர் புனரமைப்பு செய்யப்படவுள்ளது.

போக்குவரத்து அமைச்சர்  குறித்த  பகுதிக்கான விஜயத்தினை மேற்கொண்ட பின்னர் இந்தப் பாதையை புனரமைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இதில் 120 கிலோ மீற்றர் தூரத்திற்கான பகுதியே இவ்வாறு புனரமைக்கப்படவுள்ளதாக இலங்கைப்  புகையிரதத்  திணைக்களம் தெரிவித்துள்ளது.அத்தோடு, புனரமைப்பு வேலைகளுக்காக 25 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தப் புனரமைப்புப் பணிகளை இந்திய அரசாங்கம் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது