சுவிஸின் சூரிச்சில் துப்பாக்கி முனையில் கொள்ளை

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் பணிபுரிந்த ஊழியர்களை துப்பாக்கி முனையில் கட்டிப்போட்டுவிட்டு பணத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்களை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள Gerbergasse பகுதியில் C & A என்ற வணிக வளாகம் ஒன்று அமைந்துள்ளது.
இந்த வளாகத்திற்கு இன்று காலை 8 மணியளவில் இரண்டு நபர்கள் அதிரடியாக நுழைந்து அங்குள்ள ஊழியர்களை துப்பாக்கி காட்டி மிரட்டியுள்ளனர்.
பின்னர், ஊழியர்கள் அனைவரையும் கட்டிப்போட்டுவிட்டு அங்கிருந்த ஆயிரக்கணக்கான பிராங்குகளை அள்ளிக்கொண்டு வளாகத்திலிருந்து தப்பியுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பியதும் ஊழியர்கள் கடும் போராட்டத்திற்கு பின்னர் தங்களை விடுவித்துக்கொண்டு பொலிசாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய பொலிசார் ஒரு உண்மையை கண்டுபிடித்தனர்.
வணிக வளாகத்தின் கதவுகள் சில ரகசிய எண்களை அழுத்திய பின்னரே திறக்கும் என்பதால், இந்த ரகசிய எண்கள் எப்படி கொள்ளையர்களுக்கு தெரியும் என கேள்வி எழுப்பினர்.
இரண்டு கொள்ளையர்களில் யாராவது ஒருவர் ஏற்கனவே இந்த வளாகத்தில் பணிபுரிந்தவராக இருக்க வேண்டும்.
அல்லது, வளாகத்தில் பணிபுரியும் ஒருவர் அந்த கொள்ளையர்களுக்கு உதவி செய்திருக்க வேண்டும் என கொள்ளை சம்பவம் குறித்து தெளிவுப்படுத்தியுள்ளனர்.
மேலும், இரண்டு கொள்ளையர்களின் கைகளிலும் துப்பாக்கிகள் இருந்ததால், அவர்கள் பல்வேறு குற்றங்களிலும் ஈடுப்பட்டுருக்கலாம் என பொலிசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
வளாகத்தில் முன்னர் பணிபுரிந்த ஊழியர்கள் குறித்து தகவல் சேகரித்துக்கொண்ட பொலிசார் கொள்ளையடித்த நபர்களை தேடும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகின்றனர்.