ஆடியபாதம் வீதி விபத்தில் இருவர் காயம்

யாழ் ஆடியபாதம் வீதியில் பல்சர் மோட்டார் வாகனமும், மகேந்திரா வடிரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருவர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் சம்பவம் தொடர்பில் தெரிய வருவது,


கொக்குவில் சந்தியில் இருந்து தின்னவேலி நோக்கி பயணித்த வடி ரக வாகனமும், தின்னவேலியிலிருந்து கொக்குவில் பகுதியை நோக்கி வந்த பல்சர் மோட்டார் வாகனமும் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
பல்சர் வாகனத்தில் வந்தவர்கள் வடி ரகவாகனத்தை மோதியதுடன் அருகில் வந்த ஸ்கூட்டி மோட்டார் வாகனத்தையும் மோதினர். ஸ்கூட்டியில் வந்தவர்  பொய்க்கால் பொருத்தியிருந்தார் என்றும் இவரது பொய்க்கால் உடைந்ததுடன் அவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும் மதுபோதையிலேயே  பல்சர்  வாகனத்தைச் செலுத்தி வந்தார்கள் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.