சுகாதார சீர்கேடான உணவகத்துக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம்

உணவுக்கடையை அசுத்தமாக வைத்திருந்ததோடு அங்கு வைத்திருந்த உணவுப் பொருள்களையும் பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த குற்றத்துக்காக அதன் நடத்துநருக்கு மன்னார் நீதிமன்று 30 ஆயிரம் ரூபா
அபராதம் விதித்தது.

மன்னாரில் உள்ள உணவகம் ஒன்றை சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவினர் நடத்திய சோதனையையடுத்து அந்த உணவக நடத்துநருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. நீதிமன்றில் வழக்கு விசாரணைக்கு வந்தபோது தன்மீதான குற்றச்சாட்டை உணவக நடத்துநர் ஏற்றுக் கொண்டார்.
அதனையடுத்து அவரை எச்சரித்த நீதிமன்று சுகாதாரக் குறைபாடுகளைச் சீர்செய்ய வேண்டும் என்றும் அவ்வாறான சீர்கேட்டுடன் உணவகம் இயங்கக்கூடாது என்றும் கூறியதோடு அவர் புரிந்த குற்றத்துக்காக அவருக்கு 30 ஆயிரம் ரூபா அபராதம் விதித்தது நீதிமன்று.