212 பயணிகளுடன் எகிப்தில் வெடித்து சிதறிய ரஷ்ய விமானம்

ரஷ்யாவுக்கு சொந்தமான பயணிகள் விமானம் எகிப்தில் மாயமாகி உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
212 பயணிகளுடன் புறப்பட்ட ரஷ்யாவுக்குச்
சொந்தமான விமானம் எகிப்தில் மாயமாகி உள்ளது.இந்த விமானம் எகிப்தின் ஷாம் எல் ஷேக்கிலிருந்து புறப்பட்டு, புறப்பட்ட சிறிது நேரத்திலிருந்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டதாகத் தெரிய வருகிறது.
கட்டுப்பாட்டு அறையில் இருந்து தொடர்பு துண்டிக்கப் பட்டுவிட்டதால், மாயமான விமானம் குறித்து தகவல் ஏதும் தெரியாமல், தவித்த நிலையில்,ரஷ்ய விமானம் வெடித்துச் சிதறியதாக எகிப்து நாட்டு பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.பிபிசியும் இத்தகவலை ரஷ்ய பிரதமர் கூறியதாக உறுதிப்படுத்தி உள்ளது. விமானத்தில் 212 பயணிகள் இருந்தனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.