சுற்றுலாப் மைய­மாக மாறும் வளலாய் கடற்­கரைப் பகுதி

வட­மா­காண சபையால் ஒதுக்­கப்­பட்ட மாகாண அபி­வி­ருத்தி நன்­கொ­டையின் கீழ் வளலாய் கடற்­கரைப் பகுதியை சுற்­றுலா மைய­மாக மேம்­ப­டுத்­துவ­தற்­கான திட்டம் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றது.

அண்­மையில் மீள்­கு­டி­ய­மர அனு­ம­திக்­கப்­பட்ட வலி­காமம் கிழக்கு கோப்பாய் பிர­தேச செயலர் பிரி­வி­லுள்ள வளலாய் பிர­தே­சத்­தி­லுள்ள கடற்­கரைப் பகு­தியை அழ­கு­ப­டுத்தல் மற்றும் வச­திகள் செய்தல் வேலைத்­திட்­டத்­தை வட­மா­காண சபையின் உத­வி­யுடன் உள்­ளூ­ராட்சித் திணைக்­களம் மேற்­கொண்­டுள்­ளது.
வளலாய் கடற்­கரைப் பிர­தே­சத்­தை எழில்­மிகு சுற்­றுலாப் பகு­தி­யாக மாற்றும் வேலைத்­திட்­டத்­திற்கு 38 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.