அமெரிக்கா கலிபோர்னியாவில் காட்டுத்தீ :400 வீடுகள் சேதம்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான் ஆன்ட்ரியாஸ் வனப் பகுதியில் ஏற்பட்டக் காட்டுத் தீ தீவிரமாக பரவி வருகிறது. கட்டுக்கடங்காமல் பரவிய இந்த காட்டு தீயால் 1
லட்சத்து 15 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவு காடு எரிந்து நாசமாகியது.
இதுகுறித்து தகவல் அறிந்த அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில தீயணைப்பு துறையினர், 5 ஆயிரம் பேர், ராட்சத காட்டுத்தீயை அணைக்க தீவிரமாக போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தால் சுமார் 400 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். காட்டிற்கு அருகில் வசித்து வரும் 4 ஆயிரம் பேர் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக பாதுகாப்பான இடம் தேடி அலைகின்றனர்.
இதனால் கலிபோர்னியா மாநிலத்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.