ஸ்பெயினில் தொடங்கிய தக்காளி திருவிழா

உலகின் மாபெரும் 70-வது தக்காளி திருவிழாவானது ஸ்பெயின் நாட்டின் பியூனால் நகரில் உலகெங்கிலும் உள்ள சுற்றுலாப்பயணிகள் மத்தியில் கோலாகலமாக தொடங்கியது.
இந்த விழாவில் உலகெங்கிலும் இருந்து 22 ஆயிரம்
பேர் கலந்துகொள்வார்கள் என அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1945-ம் ஆண்டு முதலே ஓகஸ்ட் மாதத்தின் கடைசி புதன் அன்று பியூனால் நகர மக்கள் தக்காளி வீசும் விழாவினை கோலாகலமாக சிறப்பித்து வருகின்றனர்.
1960 களில் சர்வாதிகாரி ஃப்ராங்கோ, மத முக்கியத்துவம் ஏதும் இல்லை என கூறி இவ்விழாவினை தடை செய்தார்.
1975-ல் அவரது ஆட்சி காலம் முடிவுக்கும் வந்ததும் மீண்டும் புதுப்பொலிவுடன் தக்காளி வீசும் விழா துவங்கி நடைபெற்று வருகிறது.
விழா நாளில் காலை 11 மணியளவில் நகரின் மத்தியில் நிறுவப்பட்டிருக்கும் எண்ணெய் பூசிய தூணின் உச்சியில் கட்டப்பட்டிருக்கும் கொடியை அசைத்தபின்னர் விழா தொடங்கும். விழாவில் பங்கேற்பவர்களிடம் இருந்து கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து 12 டொலர் கட்டணமாக வசூலித்து வருகின்றனர்
                      மேலும் பங்கேற்பாளர்களின் எண்ணிக்கையை பாதுகாப்பு காரணங்கள் கருத்தில் கொண்டு 50 ஆயிரத்தில் இருந்து 22 ஆயிரமாக குறைத்துள்ளனர்.
இந்நிலையில் கூகுள் தனது டூடுல் சேவை வாயிலாக தக்காளி திருவிழாவை சிறப்பித்துள்ளது.