சந்நிதி முருகன் ஆலயத்தை நோக்கி வந்த தூக்குக் காவடிகள்


யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்று வருகின்றது.
நேற்றைய தினம் 10 வது நாள் பூங்காவனத்
திருவிழாவின் போது காலையிலிருந்து இரவு வரை ஆலயத்தை நோக்கி அலங்கரிக்கப்பட்ட உழவு இயந்திரங்களில் முருகப்பெருமானின் பக்திப்பாடல்கள் ஒலிக்க நூற்றுக்கணக்கான தூக்குக்காவடிகள் படையெடுத்து வந்திருந்தன.
இதனையும் தாண்டி மேளத்துக்கு ஏற்றவாறு ஆடிய வண்ணம் இழுவைக் காவடிகள், பாற்காவடிகள் ஆலய வீதியினை அலங்கரித்த காட்சி கண்கொள்ளாக் காட்சியாக அமைந்திருந்தது.
நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆதலால் அடியார்கள் கூட்டம் ஆலயச் சூழலில் அலைமோதியது.