பிரித்தானியாவில் உடலில் 96 ஐபோன்களை கடத்திய ஒருவர் கைது

பிரித்தானியாவில் உடலில் 96 ஐபோன்களை மறைத்து கடத்திய சீன ஆண் ஒருவரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர். பிரித்தானியாவில் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது
சீன மனிதர் ஒருவர் வித்தியாசமான முறையில் நடந்து வருவதை அவர்கள் கவனித்தனர்.
சந்தேகம் அடைந்த அவர்கள் அவரை சோதனை செய்தபோது உடலில் ஏராளமான அப்பிள் ஐபோனை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரிடமிருந்து மொத்தம் 96 ஐபோன்கள் கைப்பற்றப்பட்டது.
அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் சீனாவின் ஹபே பகுதியை சேர்ந்தவர் என்று தெரியவந்தது. மேலும் பிரித்தானியாவை சேர்ந்த ஒரு இணையத்தள நிறுவனத்தில் இருந்து ஒரு ஐபோனை 1 பவுண்டுக்கு வாங்கிய அவர் சீனாவில் 500 பவுண்டுக்கு விற்பனை செய்ய திட்டமிட்டதும் தெரியவந்தது.