மாகாண மட்டத்திற்கு தெரிவான பூமகள் கற்கைமைய முன்பள்ளி மாணவர்கள்.

சிறுப்பிட்டி மேற்கு பூமகள் கற்கைமைய முன்பள்ளி மாணவர்கள் கோப்பாய்க் கோட்ட விளையாட்டு விழாவில் வெற்றியீட்டியதைத் தொடர்ந்து யாழ் வலய விளையாட்டுபோட்டிக்குத் தெரிவாகி கடந்த 26-07-2015 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.00 மணியளவில் யாழ்/ இந்து மகளிர் கல்லூரியில்
நடைபெற்ற யாழ் வலய விளையாட்டு விழாவில் போட்டியிட்டு இரண்டு விளையாட்டுக்களில் முதலிடத்தையும் மூன்று விளையாட்டுக்களில் இரண்டாமிடத்தையும் பெற்றனர். முதலிடத்தைப் பெற்ற இரண்டு விளையாட்டுக்களும் முதன் முறையாக மாகாண மட்டத்திற்கு தெரிவாகியுள்ளது.
தெரிவா...ன விளையாட்டுக்களின் விபரம்,
1. 1 . தடைதாண்டல்- முதலாமிடம்
2. பழம் வைத்தலும் எடுத்தலும் - முதலாமிடம்.
இவ் வெற்றிக்கு உறுதுணையாக நின்ற பூமகள் கற்கை மைய ஆசிரியைகளின் அயராத முயற்சிக்கு பாரட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவிப்பதோடு, கற்கை மைய வளர்ச்சிக்காக உதவிபுரியும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எமது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றனர்.
நன்றி.
பூமகள் நற்பணிமன்றம்



















                                          

                                   கோட்ட விளையாட்டு விழாவில்
                                             பூமகள் கற்கை மையம்