பிரித்தானியாவுக்கு ஒரே நாளில் 2000 அகதிகள் தப்ப முயற்சி

பிரித்தானியாவுக்கு அகதிகள் அதிகளவு கள்ளத்தனமாக தப்பி செல்ல முயற்சிப்பதால் பிரான்ஸ் கடும் சிக்கலில் தவித்து வருகிறது.
பிரான்ஸ் நாட்டில் இருந்து பலர் கலாஸ் பகுதியில் உள்ள சேனல் டனல் வழியாக சட்டவிரோதமாக
பிரித்தானியா செல்கின்றனர்.
இதை தடுப்பதற்காக இரு நாடுகளும் முயற்சி எடுத்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த திங்கள் இரவு 2000க்கும் மேற்பட்ட அகதிகள் யூரோ டனல் வழியாக தப்பிக்க முயற்சி செய்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் 5000க்கு மேற்பட்டவர்கள் தப்பி செல்வதற்காக அப்பகுதியில் முகாமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக யூரோ டனலில் செய்திதொடர்பாளர் கூறியதாவது, பொதுவாக இரவு வேளைகளிலேயே அவர்கள் கள்ளத்தனமாக பிரித்தானியாவுக்கு செல்கின்றனர். இதை தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த கோடை காலத்தில் மட்டும் இதுவரை 8 பேர் பிரித்தானியாவுக்கு செல்ல முயன்று இறந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இவ்வாறு கள்ளத்தனமாக தங்கள் நாட்டுக்குள் வருவதை தடுப்பதற்காக பிரித்தானியா யூரோ டனலின் பாதுகாப்பிற்காக மேலும் 10.9 மில்லியன் டொலர் வழங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.