போலந்துக்கு ஆளில்லா விமானத்தில் சென்ற கருக்கலைப்பு மாத்திரைகள்

டச்சு பெண்கள் அமைப்பொன்று போலந்துக்குள் கருக்கலைப்பு மாத்திரைகளை அனுப்புவதற்கு ட்ரோன் ஆளில்லா விமானத்தை பயன்படுத்தியுள்ளது.
கருக்கலைப்புக்கு எதிரான போலந்தின்
கடுமையான சட்டங்களை சுட்டிக்காட்டுவதற்காக ஜெர்மனியிலிருந்து ஓவ்டர் என்ற ஆற்றின் மேலாக இந்த விமானத்தை விமன் ஆன் வேவ்ஸ் என்ற அந்த அமைப்பு அனுப்பியுள்ளது.
கர்ப்பத்தை ஆரம்பத்திலேயே கலைப்பதற்கு உதவக்கூடிய இந்த மாத்திரைகளை பெறுவதற்காக இரண்டு போலந்து பெண்கள் மறுபக்கத்தில் விமானத்துக்காக காத்திருந்தனர்.
கம்யூனிஷ்ட் ஆட்சிக் காலத்தில் போலந்தில் கருக்கலைப்பு சட்டப்படி ஏற்றுக்கொள்ளத் தக்கது.
ஆனால், 1993-ம் ஆண்டில் பல கருக்கலைப்புகள் சட்டவிரோதமானவையாக அறிவிக்கப்பட்டன.