தொற்றுநோய்களினால் அதிகம் பாதிக்கப்படும் மாவட்டமாக யாழ்.மாவட்டம் காணப்படுகின்றது

உணவு பாதுகாப்பின்மையினால் இலங்கையில் அதிகம் தொற்றுநோய்களினால் பாதிக்கப்படும் மாவட்டமாக யாழ்.மாவட்டம் காணப்படுகின்றது.
இலங்கையில் தொற்றுநோய்களினால் பாதிக்கப்படுபவர்கள் பற்றிய கணக்கின்படி 25வீதம்
தொடக்கம்
30வீதமான தொற்றுநோயாளர்கள் யாழ்.மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாக காணப்படுகின்றனர்.
நாம் உணவுப்பாதுகாப்பு விடயத்திலும், சுகாதார தற்பாதுகாப்பிலும் அற்கறையற்றிருப்பதனாலேயே இவ்வாறான தொற்றுநோய்கள் மற்றும் தோற்றா நோய்களின் தாக்கத்தினால் அதிகம் பாதிக்கப்படும் மக்களாக நாங்கள் மாற்றப்பட்டிருப்பதற்குக் காரணம். என யாழ்.வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியிருக்கின்றது.
உலக சுகாதார தினத்திற்காக இம்முறை உலக சுகாதார ஸ்தாபனம் உணவு பாதுகாப்பு என்னும் தலைப்பினை எடுத்திருக்கின்றது. இது எங்களுடைய யாழ்.மாவட்டத்திற்கு மிகவும் பொருத்தமானதாக அமைந்திருக்கின்றது.
யாழ்ப்பாண மக்கள் உணவு பாதுகாப்பு இன்மையினால் அதிகம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.குறிப்பாக உணவு நஞ்சாதல், நெருப்பு காச்சல், வயிற்றோட்டம் போன்ற தொற்றுநோய்கள் அதிகம் காணப்படுகின்றன.
2015ம் ஆண்டு மாசி மாதம் 31ம் திகதிக்குள் உணவு நஞ்சாதல் பிரச்சினை யினால் 3பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், வயிற்றோட்டத்தினால் 86பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்க ள், நெருப்பு காச்சலினால் 54பேர்பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள்.
இதேபோன்று கடந்த 2014ம் ஆண்டில் வயிற்றோட்டத்தினால் 1014 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். நெருப்பு காச்சலினால் 314பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்நிலையில் இலங்கையில் தொற்றுநோய்களினால் பாதிக்கப்படுபவர்களில் 25வீதம் தொடக்கம் 30வீதமானவர்கள் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.
இந்தவகையிலேயே உலக சுகாதார ஸ்த்தானபம் இம்முறை எடுத்திருக்கும் கருப்பொருள் எமக்கு பொருத்தமானதாகும். மேலும் இந்த கருப்பொருளை எடுத்தமைக்கு காரணம் உலகம் முழுவதும் உணவு பாதுகாப்பின்மையினால் 2மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றார்கள்.
அதிலும் குறிப்பாக குழந்தைகள் அதிகம் இறக்கிறார்கள்.எனவே வடமாகாண மக்கள் நாம் உணவு பாதுகாப்பில் அதிகம் அக்கறை செலுத்தவேண்டும். உணவை சுத்தமாக வையுங்கள். சமைக்காத உணவுகளையும், சமைத்த உணவுகளையும் வேறுபடுத்தி வையுங்கள்.
சமைக்கும் உணவுகளை உரியவகையில் சமையுங்கள். உணவை உரிய வெப்ப நிலையில் பாதுகாத்து வையுங்கள்.பாதுகாப்பற்ற உபகரணங்கள், பாத்திரங்களை பயன்படுத்தாதீர்கள். இவற்றை செய்வதோடு மட்டும் நின்றுவிடாமல் பயன்படுத்தும் மரக்கறிகள், பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்துங்கள்.
கீரை வகைகளை உவர் நீரில் கழுவி பின்னர் நன்னீரில் கழுவி பயன்படுத்துங்கள். உணவகங்களில் உணவு பரிமாறுபவர்கள் தொடர்பில்சுகாதார சுயபாதுகாப்புடன் நடந்து கொள்ளுங்கள். உணவுப் பண்டங்களை வெறும் கைகளினால் பரிமாறுவதற்கு இடமளிக்காதீர்கள்.
சுத்தமான குடிநீர் பாவனையினை உறுதி செய்துகொள்ளுங்கள். மேலும் எங்கள் மக்கள் குளிரூட்டியில் உணவுப் பண்டங்களை வைத்தால் கெட்டுப்போகாது என நினைக்கிறார்கள். ஆனால் குளிரூட்டிகள்உணவுகளை கெட்டுப்போகாமல் வைக்கும் என்பதற்கு எந்தவொரு உத்தரவாதமும் கிடையாது.
ஆனால் உணவுப் பொருட்கள் கேட்டுப்போவதை குளிரூட்டிகள் தாமதப்படுத்தகின்றன. எனவே கு ளிரூட்டிகளில் உணவுப் பொருட்களை வைப்பதற்கும் ஒரு கால அளவு இருக்கின்றது. இதனை மக்கள் கவனத்தில் எடுத்துக் கொள்ளவேண்டும்.
இதேபோன்று உணவு பாதுகாப்பு இன்மையினால் மக்கள் தொற்றுநோய்களுக்குள்ளாவதைப்போன்றே தொற்றாத நோய்களுக்கும் உள்ளாகின்றார்கள். குறிப்பாக புற்றுநோய், நீரிழிவுநோய், உயர் குருதி அமுக்கம் போன்ற பல நோய்கள் உண்டாகின்றது. இவ்வாறான தொற்றாத நோய்களும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிகளவில் உள்ளது.
குறிப்பாக எங்கள் குடிநீரில் நைத்திரேட்டின் அளவும் அதிகமாக இருப்பதனால் புற்றுநோய் தாக்க ம் மற்றும் நாம் விவசாயத்திற்குப் பயன்படுத்தும் மிதமிஞ்சிய இரசாயன கிருமிநாசினிகள், பசளை களினால் நச்சுப் பொருள் நாங்கள் உட்கொள்ளும் உணவுகள் ஊடாக உடலுக்குள் செல்கின்றது.
இதனால் தொற்றாத நோய்களும் உண்டாகின்றன.மேலும் நவீனமயப்படுத்தப்படும் குடாநாட்டில் தற்போது பைகளில் அடைக்கப்பட்ட உணவுப் பண் டங்களை நாம் அதிகளவில் நுகரத் தொடங்கியிருக்கின்றோம். இதனாலும் தொற்றாத நோய்களின் தாக்கம் அதிகரிக்கின்றது.
எனவே எங்கள் மக்கள் பைகளில் அடைக்கப்பட்ட உணவுகளை கொ ள்வனவு செய்யும்போது காலாவதி திகதியை, அவதானிப்பதோடு அந்த உணவில் உள்ள கொழும்பு மற்றும் உப்பு, சீனி போன்றவற்றின் அளவுகளையும் கருத்தில் எடுக்கவேண்டும். என சங்கத்தின் வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.