வாசகர்கள் அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்

அன்பின் இணைய வாசக  உறவுகள் நண்பர்கள் மற்றும் அனைவருக்கும் சிறுப்பிட்டி நாதத்தின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

 


 
 
புத்தம் புதிய பூவாய் 

புன்னகை பூ தவழ

புதிதாய் மலர்ந்த 

புத்தாண்டில்

தமிழால் இணைந்த சொந்தமாய்

இத்தரணியில் காணக்
கிடைக்காத பந்தமாய்
தமிழ் நண்பர்கள் தோட்டத்தில்
மலர்ந்த உறவானோம் நாம்....
தமிழே! உன் அன்பென்னும்
திரியில் ஒளியேற்றி
தீபமாய் நாங்கள் ஒளிவீச
உனக்கு புத்தாண்டு
கவி தொடுக்கிறேன்!
நட்பு என்னும் நூலெடுத்து
பாசம் என்னும் பூ தொடுத்து
நட்பு என்னும் சொந்தங்கள்
என்றும் வாசமாய் வீச வாழ்த்துகிறேன் நான்....
இந்த புத்தாண்டு நம் அனைவர்
மனதிலும் அமைதியையும், அன்பையும்
வெற்றியையும் மகிழ்வையும்
கொடுக்க இனிய புத்தாண்டே
வருக வருக!
எங்கள் வாழ்வும் இனிதே
மலர்க மலர்க!
அனைவருக்கும் எமது புத்தாண்டு வாழ்த்துக்கள்