கிளிநொச்சியில் சிறுமி மரணம்; விசாரணைகள் ஆரம்பம்

வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதால் உயிரிழந்தார் என சந்தேகிக்கப்படும்  சிறுமியின்  சாவு தொடர்பில் சந்தேக நபர்கள் குறித்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கிளிநொச்சியில் சிறுமியொருவர் சாவடைந்த நிலையில் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டே
 கொலை செய்யப்பட்டுள்ளார் என ஊரவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையிலேயே பொலிஸார் சந்தேக நபர்களைத்  தேடி விசாரணைகள்  ஆரம்பித்துள்ளனர். 
அதற்கமைய சிறுமி தங்கியிருந்தார் எனக் கூறப்படும் வீட்டிற்கு அடிக்கடி  செல்லும் இரு ஆண்கள் குறித்தே பொலிஸார் விசாரணைகளை முதற்கட்டமாக ஆரம்பித்துள்ளனர். 
சந்தேகத்தில் தேடப்பட்டு வருபவர்களில் ஒருவர் இந்தியாவில் வசிப்பவர் என்றும் அவர் தற்பூது கனகராயன்குளத்தில் உள்ள கிறேசர் ஒன்றில் சமையல் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளார் என்றும்  விசாரணைகளில் தெரிய வருகின்றது.
எனினும் குறித்த சந்தேக நபரைத் தேடிச் செல்லும் போது அவர் இந்தியாவுக்கு சென்று விட்டார் என அங்கிருந்தவர்கள்  தெரிவித்துள்ளனர் .அவர் கோபி என அழைக்கப்படுவார் என்றும் அவரது முழுப்பெயர் தெரியவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். 
அத்துடன்  ஆபாசப்படங்களைக் காட்டினார் என்ற சந்தேகத்திலும் ஒருவர் தேடப்பட்டு வருகின்றார். எனினும்  சிறுமியின் உடற்கூற்றுப்பரிசோதனை அறிக்கை நீதிமன்றிற்கு கிடைத்த பின்னரே முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் சிறுமியின் மாதிரிகள் சில கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளன. எனவே கொழும்பு அறிக்கையினையும் இணைத்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என கிளிநொச்சி பிராந்திய சுகாதார வைத்தியஅதி