உலகளவில் விலையுயர்ந்த நகரங்களாய் மாறிய சுவிஸ் நகரங்கள்

சுவிசின் இரு நகரங்கள் உலகளவில் மிகவும் விலையுயர்ந்த நகரங்களாய் மாறி வருகின்றன.
சமீபத்தில் நடந்த ஆய்வு ஒன்றில் உலகின் அதிக செலவாகும் நாடாக சிங்கப்பூர் அறிவிக்கப்பட்டது.
இதனைதொடர்ந்து செலவு மிகுதியான நகரங்கள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வில், சுவிசின் சூரிச்(Zurich)
மற்றும் ஜெனிவா(Geneva) ஆகிய இரு நகரங்களிலும் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து சுவிசின் பொருளாதார நிபுணர் கூறுகையில், உலகெங்கும் சுமார் 130 நகரங்களின் செலவு குறித்து நாங்கள் ஆய்வு நடத்தினோம்.
அதில் மிகவும் செலவுமிக்க நகரங்களாக ஜெனிவா மற்றும் சூரிச் நகரங்களே உள்ளது.
ஏனெனில் இந்த நகரங்களில் வாழும் மக்களின், அன்றாட வாழ்க்கை செலவே மிகவும் அதிகமாக உள்ளது என கூறியுள்ளார்.
மேலும் விலைவாசி குறைந்த நகரங்களாக இந்தியாவின் மும்பை, சென்னை, பாகிஸ்தானின் கராச்சி உள்ளிட்ட நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.