சகவிமானியால் வேண்டுமென்றே வீழ்த்தப்பட்ட ஜெர்மன் விமானம்

பிரெஞ்சு ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கிய ஜெர்மன்விங்ஸ் விமானத்தின் சகவிமானி ” வேண்டுமென்றே விமானத்தை அழிக்க” விரும்பியதாக, பிரெஞ்சுப் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
விமானி அறையில் இருந்த ஒலிப்பதிவுக்
கருவியில் இருந்து கிடைத்த தகவல்களை ஆராய்ந்த பிரெஞ்சு புலனாய்வாளர்கள், விமானத்தின் சக விமானி, விமானத்தைத் தனது கட்டுப்பாட்டில் எடுத்து, வேண்டுமென்றே விமானத்தைக் கீழ் நோக்கிக் கொண்டு சென்றதாகக் கூறினர்.
விமானிகள் அறையில் இருந்து அப்போதுதான் வெளியே சென்ற தலைமை விமானி மீண்டும் உள்ளே வர முடியாத நிலையில் விமானி அறை உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததாம்.
விமானி மற்றும் சகவிமானியின் பெயர்கள் வெளியிடப்படவில்லை.
சகவிமானி விமானம் இறுதியாக மலையில் மோதி நொறுங்கும் வரை உயிருடன் இருந்ததாகவும் புலனாய்வாளர்கள் கூறியிருக்கின்றனர்.
ஸ்பெயினின் பார்சிலோனாவில் இருந்து ஜெர்மனியின் டுசல்டார்ப் நகருக்கு சென்று கொண்டிருந்த இந்த ஏர்பஸ் 320 விமானம் செவ்வாய்க்கிழமை மலையில் மோதி நொறுங்கியது.
இதில் பயணித்த அனைத்து 150 பயணிகளும் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் 14 பள்ளிச் சிறார்களும் அடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.