ஆனைக்கோட்டை அ,மி.த.க. வில் நடைபெற்ற செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா (படங்கள்)

யாழ். ஆனைக்கோட்டை அமெரிக்க மிஷன் தமிழ் கலவன் பாடசாலையின் செயற்பட்டு மகிழ்வோம் வருடாந்த இல்ல மெய்வன்மை போட்டி இன்று பிற்பகல் கல்லூரி மைதானத்தில் இடம்ஆனைக்கோட்டை அ,மி.த.க. வின் செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு விழா


கல்லூரி முதல்வர் தி.ஸ்ரீதரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்விற்கு பிரதம விருந்தினராக  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி  மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கலந்து கொண்டனர்.

மேலும் இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக கோட்டக்கல்விப் பணிப்பாளர் ச.சிவானந்தராஜா, கௌரவ விருந்தினராக ஆரம்பக்கல்வி ஆசிரிய ஆலோசகர் செல்வி.செ. சுப்பிரமணியம் ஆவர்களும் கலந்து கொண்டனர்.

இதன் போது விளையாட்டுகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய, சிறந்த வீரர்களாக தெரிவுசெய்யப்பட்ட வீர வீராங்கனைகளுக்கு விருந்தினர்கள் சான்றிதல்களையும் கேடயங்களையும் வழங்கி கௌரவித்தனர்.