யாழ்.திக்கம் வடிசாலை விரைவில் ஆரம்பம்

திக்கம் வடிசாலையின் செயற்பாடுகள் விரைவில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. தற்போது பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் கீழ் இருக்கும் இந்த வடிசாலையின் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிப்பது குறித்த கலந்துரையாடல் ஒன்று கடந்த சனிக்கிழமை சமாச மண்டபத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா, பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் கே.நடராஜா ஆகியோர் இந்தக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
கடந்த சில மாதங்களாகச் செயற்பாடு இன்றி முடங்கிக் கிடந்த வடிசாலை மீள திறக்கப்பட்டுள்ளது. வடிசாலையின் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிப்பது மற்றும் அதன் அபிவிருத்தி குறித்து இந்தக் கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தக் கலந்துரையாடல் குறித்து பனை அபிவிருத்திச் சபையின் முன்னாள் தலைவர் கே.நடராஜா தெரிவிக்கையில்,
பழைமை வாய்ந்த திக்கம் வடிசாலையை அபிவிருத்தி செய்து அதன் மூலம் பனம் சாராயத்தைக் கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. கடந்த காலங்களில் அரசியல் நிலைமைகளால் இந்த வடிசாலை உரிய முறையில் செயற் படுத்தப்படவில்லை.
இதனால் வடிசாலைக்கு ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து ஆராய்வதற்கு விசேட குழு ஒன்றை ஏற்படுத்தவும்  நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதற் கட்டமாக திக்கம் வடிசாலை சமாசத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுத் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 
வடிசாலையில் செயற்பாடுகளை விரைவாக ஆரம்பிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக வடிசாலையில் உற்பத்தி செயற்படும் பனஞ்சாராயத்தை உரிய முறையில் சந்தைப்படுத்து வதற்கான வசதிகளும் ஏற்படுத்தப் படும் என்று கூறினார். திக்கம் வடிசாலையின் மூலம் முன்னர் பெருமளவு வருமானம் வடக்குக்குக் கிடைத்து வந்தது. 
இதன் பின்னர் இந்த வடிசாலையை தென்னிலங்கை நிறுவனம் ஒன்றுக்குக் கொடுத்த மையால் அதன் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்தன. ஆட்சி மாற்றத்தின் பின்னர்  வடிசாலை பனை, தென்னை வள அபிவிருத்திக் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தின் கீழ் கொண்டுவரப்பட்டது. 
இதனை மீண்டும் இயங்க வைப்பதற்கான நடவடிக்கைகள் துரித கதியில் மேற் கொள்ளப்பட்டன. இதன் ஒரு கட்டமாக வடிசாலை இப்போது திறக்கப்பட்டுள்ளது. அதன் செயற்பாடுகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனை இலாபகரமாக மீண்டும் இயங்க வைப்பதற்கான திட்டங்கள் தற்போது வகுக்கப்பட்டு வருவதாகவும், இதன் மூலம் அதிகளவு வருமானத்தை ஈட்டுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,பெருமளவு பனங்சாரயத்தை உற்பத்தி செய்து சந்தைப்படுத்தமுடியும் எனவும் கூறப்பட்டது.

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=660723888124792401#sthash.k89fa5J9.dpuf