103 ஆண்டுகளாக இணைப்பிரியாமல் வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள்

பிரித்தானியாவில் 103 வருடங்களாக வாழ்ந்து வரும் இரட்டை சகோதரிகள் மகிழ்ச்சி பொங்க பேட்டி ஒன்றை அளித்துள்ளனர்.
பிரித்தானியாவின் கேயர்பில்லி(Caerphilly) நகர் அருகே உள்ள அபெர்ட்ரிட்வெர்(Abertridwr) என்ற கிராமத்தில் கடந்த 1912ம் ஆண்டில் பிளோரன்ஸ் டேவிஸ்(Florence Davies) மற்றும் கிளெனிஸ்
தாமஸ்(Glenys Thomas) என்ற இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தனர்.
தற்போது 100 வயதை தாண்டியுள்ள இந்த சகோதரிகள், இன்று வரை அதே கிராமத்தில் ஒன்றாக வசித்து வருகின்றனர்.
மேலும் உலகின் வயதான இரட்டையர்களான இவர்களுக்கு தற்போது 5 குழந்தைகளும், 12 பேரக்குழந்தைகளும், 21 கொள்ளுப்பேரன்களும் உள்ளனர்.
இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு இந்த சகோதரிகள் அளித்த பேட்டியில், நாங்கள் எங்களின் பிறந்த தினம் முதல் ஒருவரை ஒருவர் பிரிந்ததில்லை.
திருமணமான பின் சில காலம் பிரிந்திருந்தாலும், ஒரு கட்டத்தில் அடுத்தடுத்த வீடுகளில் குடியேறி ஒருவருக்கொருவர் ஆறுதலாக உதவி செய்து கொள்வோம் என தங்களின் ஒற்றுமையை பற்றி புகழ்ந்து கூறியுள்ளனர்.